ஹெல உறுமய – விமல் வீரவங்ச – கோத்தபாய ஆகியோரின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை -TNA

tamil-news-sampanthan
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவங்ச,
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் கருத்துக்கள் பதிலளிக்காது இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சில்வெஸ்டர் விடுதியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் தேர்தல் நடத்தப்படும் தினத்தை தேர்தல் ஆணையாளர் அறிவித்த பின்னர், கூட்டமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார். -GTN

Tags: ,