சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கிய நடிகையின் டைரி படத்தில் நடித்த சனா கான் திடிரென தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழில் சிம்புவின் சிலம்பாட்டம் மூலம் அறிமுகமானவர் சனா கான். தொடர்ந்து ஆயிரம் விளக்கு, பயணம் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் பொலிவூட்டிலும் அறிமுகமாகி தற்போது சல்மான் கானுடன் மென்டல் படத்தில் நடித்து வருகிறார்.
படங்களை விட அதிகமாக மேடைப் பேச்சு மற்றும் இதர சர்ச்சைகளின் மூலமே சனா கான் அதிகளவில் பேசப்படும் நடிகையானார். இது இவ்வாறிருக்க அண்மையில் உறவினர் பையனுக்காக மைனர் பெண்ணொருவரையும் சனா கான் கடத்த முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் திடீரென நடிகை சனா கான் தலைமாறைவாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் நடித்து வந்த மென்டல் படம் உள்ளிட்ட மேலும் சில படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இவரது நடிகையின் டைரி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் நடிகை அஞ்சலியும் தலைமறைவாகி பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.