55 அதி சொகுசு மேர்சிடீஸ் பென்ஸ் ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு அதி சொகுசு ரக கார் வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் மேர்சிடீஸ் பென்ஸ் ரக கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தகவல் வெளியிட்டு 48 மணித்தியாலத்திற்குள், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது, இலங்கை வங்கியின் ஊடாக இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
முக்கிய பிரபுக்கள் பயணம் செய்வதற்காக இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள அதி நவீன மாதிரியிலான கார்களே இறக்குமதி செய்யப்படவுள்ளன. -GTN