மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம்! கோத்தபாய

Gotabhaya-Rajapaksa
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனவே மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அது பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமையாகும்.

எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

மேலும் புலனாய்புப் பிரிவினரால் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். இந்த விடயம் குறித்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,