13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது – அரசாங்கம்

13th-amendment
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன.

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,