நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ”என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,” என்றார். மார்க் டுவைன் பேசாமல் திரும்பி விட்டார்.
சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் டுவைனிடம், ”உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,” என்று கேட்டார்.
மார்க் டுவைன் அமைதியாகச் சொன்னார், ”என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.” என்றார்.