பொதுவாக காலையில் சூரியன் உதிக்கும் முன் வீட்டு வாசலில் சானம் தெளித்துக் கோலம் போடும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது.
இதனை அறிவியல் ரீதியாகப் பார்க்கப் போனால், சாணம் கிருமி நாசினியாக செயல்பட்டுள்ளது தெரிய வரும்.
அரிசி மாவைக் கொண்டு கோலம் போடுவது சில சிறிய ஜீவன்களுக்கு உணவளிக்கும் விதமாக அமைகிறது.
கோலம் போடும் பெண்களுக்கு நோய் வருவது குறைவு.