ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கும் அவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் பிரான்ஸ் அரசு சட்டபூர்வமாக அங்கீகாரமளித்துள்ளது.
ஓரினச் சேர்க்கை திருமணத்;திற்கான சட்டபூர்வ அங்கீகாரம் என்ற விவகாரம் நீண்ட நாட்களாக பல்வேறு சர்ச்சைகளளையும் சூடான அரசியல் விவாதங்களையும் பிரான்ஸில் ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் நேற்று ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் கையொப்பமிட சட்டம் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் உலகின் 14ஆவது நாடாக பிரான்ஸ் இடம்பிடித்துள்ளது.
இதனால் விரைவில் பல்லாயிரக்கான ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொள்ள தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இச்சட்டத்துக்கு எதிராக தொடர்ந்தும் நாம் போராடுவோம் என ஓரினச் சேர்க்கை எதிர்பாளர்கள் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.