10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர ‘துர்நாற்ற’ மலர் இங்கிலாந்தில் பூத்தது

flower
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் பூத்துள்ளது.

மற்ற நறுமணம் வீசும் மலர்களைப் போலன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரும் இந்த ‘டைட்டன் அரும்’ மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான்.

பூக்கும் காலத்தில் ‘டைட்டன் அரும்’ செடி நாளொன்றுக்கு 10 செ.மீ வரை வளரும். முழுதாக பூத்த பின்னர் மலர் 48 மணி நேரத்திற்குள் சுருங்கி இறந்துவிடும்.

இந்த மலரின் அழகை ரசிப்பவர்கள் அது வெளிப்படுத்தும் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

அழுகிப்போன இறைச்சி, சாணம், கெட்டுப்போன பாலாடைக் கட்டி ஆகியவற்றின் முக்கூட்டு கலவையாக இந்த மலரின் துர்நாற்றம், எரையும் முகம் சுளிக்க வைத்துவிடும்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=747#sthash.D7rAu1Gc.dpuf

Tags: ,