14வது பெண்டாட்டியா? ஆளை விடு சாமி!

Swaziland
மன்மத ராஜா! -ஏ.ஜே.ஞானேந்திரன், பாசல் சுவிஸ்.

அந்த இளம் பெண்ணுக்கு வயது 22தான். ஒருவருக்கு பல மனைவிகளில் ஒருத்தியாகி விடுவேனோ என்ற ஆதங்கத்தில் நாட்டைவிட்டு தப்பியோடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கின்றார் இந்த அழகி.

எங்கே நடக்கின்றது இந்த அநியாயம்?

ஆபிரிக்காவில்தான்! ஆபிரிக்காவிலுள்ள சுவாஸிலாந்து என்னும் நாட்டின் மன்னருக்கு ஏற்கனவே 13 மனைவிமார் இருக்கின்றார்கள். வருடாவருடம் அரைநிர்வாணமாக இளம் கன்னிப் பெண்கள் கலந்துகொண்டு இடம்பெறும் விழாவில், தனக்குப் பிடித்த ஒருத்தியைப் பொறுக்குவது இந்த மன்னரின் வழமை.

ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆனால் நிஜந்தான். ஒரு பெண்டாட்டியை வைத்துக் கொண்டே தடுமாற வேண்டி இருக்கின்றது. இந்த மன்னருக்கோ ஆண்டுக்கு ஒன்று புதிதாகத் தேவைப்படுகின்றது. 45வயதான இந்த மன்னருக்கு இந்த நாட்டின் கலாச்சாரப்படிää ஆண்டுக்கொரு மனைவியை மணந்து கொள்ளலாம்.

இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் இந்த சுவாஸிலாந்துப் பெண்ணின் வயது 22. பெயர் Tintswalo Ngobeni. இந்த நாட்டு மன்னர் Mswati தன்னை தனது 15வயதிலிருந்தே பாடசாலையில் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டதாகவும், தன்னைத் தனது மனைவியாக்கிக் கொள்ளவும் ஆசைப்பட்டார் என்றும் இவள் முறைப்பாடு செய்திருக்கின்றாள். இதிலிருந்து தப்பவே நான் இங்கு ஓடிவந்திருக்கின்றேன். நான் நாடு திரும்பினால் கைதாகலாம் அல்லது கொல்லப்படலாம் என்று கூறியிருக்கின்றார் இந்த இளம் பெண்.
இங்கிலாந்திற்கு இவள் வந்தபோது வயது 15. ஆனால் அரசு இன்னமும் இவள் அகதி விண்ணப்பத்தை ஏற்கவில்லை. இங்கிலாந்தில் தன் நாட்டிற்குää குறிப்பாக மன்னரின் அடாவடித்தனமான திருமணச் சடங்குகளுக்கு எதிராக அடிக்கடி போர்க்கொடி உயர்த்தி வருகிறாள்.

மன்னருக்கு 27 பிள்ளைகள் இருக்கின்றார்கள். வில்லியம்-கேற் திருமணத்திற்கும், மகாராணியாரின் ஜூபிலி விழாவிற்கும் விருந்தாளியாக வந்து போயிருக்கிறார் இந்த மன்மத மன்னன். இந்த மன்னருடைய 6வது மனைவி தனக்கு உடல்ரீதியாக வரும் நிந்தைகளைப் பொறுக்க முடியாமல் எங்கோ தப்பியோடி விட்டாள்.

தன் மனைவிமாரை ஆண்டுக்கு ஒரு தடவை அமெரிக்கா சென்றுவர அனுமதிப்பதோடு, அவர்கள் ஆசைப்பட்ட சிலவற்றை வாங்கிக் கொள்ள கொஞ்சம் பணமும் கொடுப்பாராம் இந்த கோடீஸ்வர மன்மத மன்னர்!

ஒரு கொசுறுச் செய்தி: உலகிலேயே மிக அதிகமான எயிட்ஸ் நோயாளிகள்- அதாவது ஒவ்வொரு ஐந்து கர்ப்பிணிப் பெண்களிலும் இருவருக்கு எயிட்ஸ் என்ற கணக்கில்ää இந்த நாடு எயிட்ஸ் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றது. 1999இலிருந்து இங்குள்ளவர்கள் ஆயுட்காலமும் வெகுவாகக் குறைந்திருக்கின்றது. இப்பொழுது பிறக்கும் குழந்தைகள் 40 வயதிற்கு முன்பு இறப்பது என்பது 75 வீதமான அளவிற்கு உயர்ந்திருக்கின்றது.

இவருடைய அப்பாவும் இவரைப் போலவே பல பெண்டாட்டிகளின் தாசராக இருந்திருக்கின்றார். புலி பத்தடி பாய்ந்தால், குட்டி என்ன பேசாமலா இருக்கும்?

Tags: ,