தோழர்களின் கனவுகளை சுமக்கிறது இந்த பாடல்…

tamilsong
மிக நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பாடல் உணர்வுகளை திரட்டி சிலிர்க்க வைக்கிறது. அதுவும் சினிமா பாடல்.

மக்களின் உழைப்பை, வளங்களை, இறையாண்மையை, உரிமைகளை கூறுபோட்டு பங்குச்சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆட்சியில் இருக்கிற மாஃபியா கூட்டம் விற்றுக்கொண்டிருக்கிற வேளையில்… மக்களை விடுவிப்பதற்கான மகத்தான ஒரு சித்தாந்தம் கட்சிகளின் தலைமைகளிடம் சிதைந்து பாழ்படுகிற காலத்தில்…
பொலிட்பீரோக்களில் சாதி ஆதிக்கமும், “பெருந்தேசியமும்”, சந்தைசார்பு பார்வைகளும் மலிந்துள்ள காலத்தில்…

இன்னமும் சிகப்பை நெஞ்சில் நேர்மையுடன் சுமந்து அடிமைப்படுகிற மக்கள் பக்கம் நிற்கிற தோழர்களின் கனவுகளை சுமக்கிறது இந்த பாடல்…

விடுதலை தேடுகிற இன மக்களின் சுதந்திர உரிமைக்கான வழிகளை ஏற்கிற, ஆதரிக்கிற அனைவருக்கும் இந்த பாடல்.

Tags: , ,