சீனாவின் க்வாங்டோ நகரில் மஸாராட்டி க்வார்ட்டேபோர்ட்டே காரை வாங்கிய வாங் என்பவர் சர்வீஸ் சரியாக செய்யவில்லை என்கிற காரணத்துக்காக மஸாராட்டி காரை மக்கள் முன்னிலையில் அடித்து நொறுக்கியிருக்கிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டு 2.30 கோடி ரூபாய்க்கு மஸராட்டி காரை வாங்கியிருக்கிறார் வாங். காரில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக சர்வீஸ் சென்டருக்கு காரை எடுத்துச்சென்றபோது புதிதாக பாகங்கள் மாற்றியதாக பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால் காருக்குள் எந்த பாகமும் புதிதாக மாற்றப்படவில்லை. அதன்பிறகு கதவில் ஏற்பட்ட பிரச்னைக்காக காரை கொண்டுசென்றபோது பிரச்னையை சரிசெய்யாமல், கதவில் ஸ்க்ராட்சுகளையும் போட்டுக் கொடுத்துவிட்டனர் என்பதால் கடுப்பான வாங் காரை பொதுமக்கள் முன்னிலையில் உடைத்திருக்கிறார்.