அஜித்தின் கதையில் விஜய்… மீண்டும் இணைகிறது முருகதாஸ் – விஜய் கூட்டணி

vijay-murugadas
அஜித் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருந்த படம் கைவிடப்பட்ட நிலையில் அக்கதையில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

‘இரட்டை தல’ என பெயர் கொண்ட படத்தில் அஜித்தும் முருகஸும் தீனா படத்திற்கு பின்னர் இணையவுள்ளார்கள் என வெளியான தகவல்களால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. பினனர் அப்படம் இப்போதைக்கு சாத்தியமில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் அஜித்துக்காக முருகதாஸ் எழுதிய அதே இரட்டை வேடம் கொண்ட கதையில் விஜய் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலாவர ஆரம்பித்துள்ளது. இக்கதையை விஜய்க்காக சில இடங்களில் மாற்றங்களை செய்து வருகிறாராம் முருகதாஸ்.

தற்போது ஹிந்தி துப்பாக்கியில் மும்முரமாக உள்ள முருகதாஸும், தலைவா படத்தின் பின்னர் ஜில்லாவில் மும்முரமாகியுள்ள விஜயும் அடுத்த வருடம் ஜனவரியில் இப்படத்திற்காக இணையவுள்ளனராம்.

இச்செய்தியை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் மீண்டும் ஐ எம் வெய்ட்டிங் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

Tags: , ,