
மே மாதம் வந்தாலே ஈழத்தமிழர்களின் நெஞ்சில் காயாத இனப்படுகொலையின் துயரம் பெருக்கெடுக்கிறது. இந்த மே மாதத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன.
இந்த நூற்றாண்டில் நடந்த மாபெரும் இனப்படுகொலை என்பது முள்ளிவாய்க்காலில் நடந்த ஈழத்துப்படுகொலை. முள்ளிவாய்க்கால் என்பது ஈழப்போராட்டத்தின் தோல்வி என்று இலங்கை அரசாங்கத்தால் கொண்டாடப்படும் நிலையில் அதுவே ஈழப்போராட்டத்தின் அடுத்த கட்ட அரசியல் தொடங்கும் சாட்சியப் பிரதேசமாகவும் இருக்கிறது.
இலங்கை சுகந்திரமடைந்த நாட்களிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதசக்திகளின் இனவன்முறைகள் தொடங்கிவிட்டன. 1983இல் நடந்த இனப்படுகொலையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அன்று முதல் முள்ளிவாய்க்கால் வரை பல லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இழந்த உரிமையை கேட்டுப் போராடிய ஒரு இனத்தை மீண்டும் மீண்டும் இழப்புக்கு உள்ளாக்கி வதை செய்தது இலங்கை அரசாங்கம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது இலங்கை அரசைப் பொறுத்த வரையில் ஈழத் தமிழர்கள் எக்காலத்திலும் தனிநாடு கேட்டோ, சுய உரிமையை கேட்டோ போராடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலையாகும்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
ஈழத்தின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கிறது முள்ளிவாய்க்கால் பகுதி. 2002ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த சமாதான ஒப்பந்தத்தை மீறி 2006ஆம் ஆண்டில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையேற்ற இலங்கை அரசாங்கம் யுத்தத்தை தொடங்கியது. ஈழத்தின் கிழக்கில் தொடங்கிய யுத்தம் வடக்கை நோக்கியும் மூண்டது. 2007ஆம் ஆண்டில் வடக்கில் ஆரம்பித்த இன அழிப்பு யுத்தம் 2009 மேயில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிந்தது.
கிளிநொச்சியின் வீழச்சிக்குப் பின்னர் தர்மபுரம், விசுவடு போன்ற பகுதிகள்மீதான இலங்கை அரச படைகளின் தாக்குதல்களுடன் அப்பாவி மக்களை பெரும் எண்ணிகையில் வேட்டையாடும் படுகொலை நடவடிக்கை தொடங்கியது. முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லபட்டுள்ளார்கள். முழுக்க முழுக்க யுத்த விதிகளுக்கு மாறாக அப்பாவி மக்களை கொன்று போட்டது இலங்கை அரசு. 2009 மே மாதம் வரையில் முல்லைத்தீவு மாவட்டமும் அம்மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலும் பிண தேசமாகக் கிடந்தது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகயை நிகழ்த்துவது என்பது இலங்கை அரசின் நோக்கமாகவே இருந்தது. தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை கைவிடவும் வாழ்நாளில் அவர்கள் தங்கள் சுய உரிமை கோரக்கூடாது என்பதற்காகவுமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியது.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இந்த உலகமும் உடந்டையாக இருந்தது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும், தமிழ் மக்களை ஒழிக்க வேண்டும், யுத்த்தை நடத்த வேண்டும் என கங்கனம் கட்டியிருந்தது இலங்கை அரசு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது நன்கு திட்டமிட்டு உலக வல்லாதிக்கங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் செய்யப்பட்ட கூட்டுப்படுகொலை. இந்தப் படுகொலையில் இந்தியா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளுக்குமே பங்கியிருக்கிறது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒழிக்க வேண்டும், அவர்களின் கோரிக்கையை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இரக்கமற்ற முறையில் மிகக் கொடூரமான முறையில் நடந்ததுதான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.
முடிவற்றுத் தொடரும் இன அழிப்பு
முள்ளிவாய்க்காலின் பின்னரும் இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தவில்லை. எந்த நோக்கத்திற்காக முள்ளிவாய்க்கால் யுத்தம் நடத்தப்பட்டதோ அதே நோக்கில் தொடரந்தும் இன அழிப்புப் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் ஈழத்தில் இராணுவத்தின் கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காணாமல் போதல்கள் நடக்கின்றன. கைதுகள் நடக்கின்றன. 2010ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் முழுவதிலிருந்தும் பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லபட்டிருக்கிறார்கள்.
கொடும் போர் மூலம் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை படைகள்தான் இன்று அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. ஒரு இராணுவ ஆட்சியே ஈழத்தில் நடக்கிறது. எங்களுடைய வீடுகள் இராணுவ முகாங்களுக்குள் இருக்கின்றன. எங்களுடைய வாழ்க்கை இராணுவ முகாங்களுக்குத்தான் நிகழ்கிறது. யாருக்கும் எதுவும் எப்பொழுதும் நடக்ககூடியதாகவே இருக்கிறது பூர்வீக ஈழதேசம்.
முழுக்க முழுக்க மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடந்தாலும் அதையும் கண்காணிக்கிறது இராணுவம். மீண்டும் தமிழர்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை ஆரம்பிகக் கூடும் என்றும் தமிழர்களை தொடர்ந்து அடக்கி அழித்து ஈழ தேசத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் இலங்கை படைகள் ஈழ மண்ணில் தமது நடவடிக்கைகளைத் தொடருகின்றன.
பறிபோகும் நிலம்
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்தவுடன் தமிழர்களின் நிலத்தை ஆங்கிரமித்திருக்கும் இலங்கை அரசு அந்த நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியது. கிராமம் கிராமமாக அபகரிக்க முற்பட்ட பொழுது அதற்கு எதிராக மக்கள் அதிரடியாக தொடங்கிய போராட்டங்கள் ஈழப்போராட்டத்தின் முக்கியமான விடயங்களாக அமைந்தன. முள்ளிவாய்க்கால் பேரழிவு ஈழ மக்களை வாய் மூடி தொடரும் அபகரிப்புக்கு மௌனிகளாக வைத்திருக்கும் என்று இலங்கை அரசாங்கம் கருதிய வேளை எங்கள் நிலம் எமக்கு வேண்டும் என்று உரைத்தார்கள் மக்கள். முள்ளிவாய்க்காலுடன் ஈழப்போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை உணர்த்தியது மக்களின் பரவலான செறிவான போராட்டம்.
ஈழப்போராட்டம் அடிப்படையில் நிலத்திற்கான போராட்டம். போராட்டத்தின் மூன்று கோரிக்கைகளில் ஒன்று மரபுவழித்தாயகம். இலங்கை சுகந்திரமடைந்த கால கட்டம் முதல் ஈழத் தமிழர்களின் மரபு வழித்தாயகத்தை இலங்கை அரசாங்கங்கள் சூறையாடத் தொடங்கின. 1920கள் முதல் திருகோணமலை மண்ணை குறி வைத்து இலங்கைப் படையெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் விளைவாக இன்று சிங்களவர் அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதன் மூலம் தமிழர் தேசத்தின் குடிப்பரம்பலை வீழச்சிக்கு உள்ளாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் திட்டமாகும். தமிழர் தேசம் என்ற அடையாளமே இருக்கக்கூடாது என்றும் எதிர்காலததில் தனிநாடு கோரிய ஒரு பொதுவாக்கெடுப்பு நடந்தால் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக்கூடாது என்பதற்காகவுமே நிலம் அபகரிக்கப்படுகுpறது.
தமிழர்களுக்கு உரிமை இல்லை
தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கக்பட மாட்டாது என்று கடந்த சுகந்திர தினத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்று யாருமில்லை என்றும் முன்பொருமுறை தெரிவித்திருந்தார். ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லி இப்படி தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பறித்து இருப்பவர்களையும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார் ரஜாபக்ச.
ஈழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13ஆவது திருத்தச் சட்டத்தை முன் வைக்குமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இடைக்கார தன்னரசை முன்வைக்குமாறும் கோருகின்றன. இலங்கை இந்திய ஒப்பந்த்தில் இடம்பெறும் 13ஆவது அரசியல் திருத்த்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவேன் என்று சொல்லியே யுத்தம் நடத்திய ராஜபக்ச இருக்கும் சின்னச் சின்ன உரிமைகளையும் கரையானைப்போல அரித்து விழுங்கிக் கொண்டிருக்கிறார். ராஜபக்ச தமிழர்களுக்கு தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை யாருக்குமே கிடையாது.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல
இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழிர்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகள்தான் ஈழப்போராட்டத்தின் இரத்த சாட்சியங்களாக உலக சமூகத்தின் முன்பாயுள்ளன. போர் விதிகளுக்கு முற்றிலும் மாறாக ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்ததும் ஈவரக்கமற்ற முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதுமே இன்று ஈழம் என்ற தனிநாடு தேவை என்பதை உலக சமூகத்திற்கு உணர்த்துகின்றது.
வடகிழக்கு தமிழர் தாயகம் என்பது ஒரு பதிய தீர்வல்ல. அது வரலாற்றுபூர்வமாக இருந்த தமிழ் மக்களின் பாரம்பரிய தேசம். அந்த தமிழர் தாயகத்தில் இழந்துபோன உரிமைகளை மீட்பதன் மூலமே இலங்கைத்தீவில் ஈழமக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது மீண்டும் உலக அரங்கில் அதனைத் தெளிவுபடுத்தி உள்ளது. முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தகர்ந்து போகும் என்று இலங்கை அரசு கண்ட கனவே இப்பொழுது தகர்ந்து போயிருக்கிறது.
அண்மையில் கிளிநொச்சியில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த சிறிதரன் எம்.பியின் அலுவலகத்தை சிங்கக்கொடி ஏந்தியவர்கள் தாக்கினார்கள். அதன் பின்னர் கிளிநொச்சியில் இருந்த உதயன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கினார்கள். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள அப்பத்திரிகையின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டன. தெற்கில் தமிழர்கள் வாழும் மலையத்தில் தொழிற்சங்கக் கூட்டம் நடந்த பொழுது அங்கும் கற்கள் வீசித்ததாக்கப்பட்டள்ளது.
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலையிலும் ஈடுபட்டது என்று உலக நாடுகள் குற்றம் சாட்டும் நிலையிலும் இலங்கை அரசாங்கம் ஈழத்தில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்ற நடவடிக்கைகளையும் இனப்படுகைலையையும் இன்னமும் நிறுத்தவில்லை என்பதைத்தான் ஈழத்தில் நடக்கும் இவ்வாறான நிகழ்வுகள் காட்டுகின்றன. அண்மையில் ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக பெரும் எச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்ட சூழலிலும் தன் நடவடிக்கைளை நிறுத்தாத நிலையில் ஒரு வலிமையற்ற தீர்மானம் இவ்வரசை எத்தகைய இன அழிழப்பு நடவடிக்கையில் ஈடுபட உற்சாகம் அளிக்கும்?
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களும் புலிகள் இயக்கமும் சிந்திய இரத்தம் என்றுமில்லாதவாறு உலகத்தின் பார்வையை ஈழத் தமிழர்களின் பக்கம் கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் வரலாறு காணாத வகையில் எழுச்சி கொண்டுள்ளன. உணர்ச்சி ரீதியாக மட்டுமன்றி அறிவுரீதியாகவும் அமைந்திருக்கிறது மாணவர் போராட்டம்.
ராஜபக்ச அரசு இழைத்த குற்றங்களும் தொடர்ந்திழைக்கும் குற்றங்களும் இன்று உலகின் கனவத்திற்கு செல்லுகிறது. நடந்த போர்க்குற்த்திற்கும் இனப்படுகொலைக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதிவழங்காவிட்டால் அடுத்த தலைமுறை போராட்டத்தில் குதிக்கும் என்ற உண்மையை உலகம் புரிந்திருக்கிறது. நிச்சயமாக இதுவே வலாற்றில் நிகழப்போகிறது. அதன் தொடக்கமாக தமிழக மாணவர் போராட்டத்தை குறிப்பிடலாம்.
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லபட்டாலும் எஞ்சியிருக்கும் ஈழ மக்களின் குரல் ஒடுங்கிவிடலி;லi. அது உலகமெங்கிலுமிருந்தும் பரவாக ஒலிக்கிறது. அங்கு ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தி எது தீர்வு? எதை தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்று பரீட்சித்துப் பார்க்கட்டும். முள்ளிவாய்க்காலுடன் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம்தான் சிதைக்கபட்படதே தவிர ஈழமக்களின் உரிமைக்கான அரசியல் போராட்டங்களை ஒரு பொழுதும் அழித்துவிட முடியாது.
ஏனெனில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய யதார்த்தபூர்வமான தீர்வொன்றே முடிவாக அமையும். ஈழத்தில் நடந்த அநீதிகளுக்கும் அதுவே தீர்வு. ஈழத்திற்கு மாத்திரமின்றி இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கும் தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்கும் இப்பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அதை;தான் இரத்தத்தால் எழுதியிருக்கிறது முள்ளிவாய்க்கால்.
ஒரு இனத்தின் வாழ்வுக்கும் பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அதை;தான் இரத்தத்தால் எழுதியிருக்கிறது முள்ளிவாய்க்கால். -GTN





