ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மார்ச் மாத வீட்டு மின்சாரக் கட்டணம் 121114 ரூபா என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சரின் தனிப்பட்ட வீட்டுப் பாவனை மின் கட்டணத்தை அரசாங்கம் பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்தி வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டணமானது அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.மின்சாரக் கட்டணத்தை அரசாங்கம், மின்சாரக சபைக்கு செலுத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கான மின்சாரக் கட்டணத்தை பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்துவதனை ஜனாதிபதியும் அமைச்சர்களும் நிறுத்த முடியாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். புதிய மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக மக்கள் நிச்சயமாக போராட்டம் நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரம் தொடர்பிலான அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளே நாடு இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க ஏதுவாக அமைந்துள்ளது என கே.டி.லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார். -GTN