தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி

milk
இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் இணைந்து தானமாகப் பெற்ற தாய்ப்பாலினால் குழந்தைகளுக்கான ஒரு சோடி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

உலக தாய்ப்பால் தான தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்று தாயொருவரினால் வழங்கப்பட்ட தாய்ப்பாலைக் கொண்டு இங்கிலாந்து கிழக்கு சசெக்ஸ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான நிக் கென்ட் மற்றும் டான்யா டீன் ஆகிய இருவரும் இணைந்தே இப்பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே தாய்பால் ஐஸ்கிரீம் மற்றும் தாய்ப்பால் ஆபரணங்கள் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தாய்பால் பாதணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

சாதரணமான சாதனங்களைக் கொண்டு இலகுவான முறையிலேயே இந்த தாய்ப்பால் பாதணிகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்ப்பாலிலுள்ள புரதத்தினை கடின பிளாஸ்டிக்காக மாற்றி 3 இன்ச் அளவான குழந்தைகளுக்கான பாதணியை வடிவமைத்துள்ளனர்.

தாய்ப்பால் தானத்தை ஊக்கிவிக்கும் முகமாகவே தானமாக கிடைத்த தாய்ப்பாலின் மூலம் இப்பாதணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags: ,