போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை

jail
போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குடி போதையில் குறைப் பிரசவத்தில் குழந்தை ஒன்றை பெற்றமைக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிடுகையில், போலந்து நாட்டின டொமஸியோ நகரிலுள்ள மதுக்கடையொன்றில் 24 வயதான குறித்த கர்ப்பிணிப் பெண் மது போதையில் மயங்கி வீழ்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அப்பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தேவை கருதி அங்கு அப்பெண்ணுக்கு சிசேரியன் சிகிச்சை மூலம் 2 வார குறைப் பிரசவ குழந்தை கிடைத்துள்ளது.

இக்குழந்தையின் குருதியில் சராசரியாக இருக்க வேண்டிய மதுவின் அளவை விட அதிகமாக அதாவது 4.5 கிராமாக இருந்துள்ளது.

இதனால், குழந்தையின் இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததுடன் சுவாசக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தை உயிருக்கு ஆபாத்தான நிலையில் காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாயின் இரத்தத்தைப் பரிசோதித்து பார்ர்த்துள்ளனர் வைத்தியர்கள். இதன்போது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவினைப் போல 23 மடங்கு மது அவரின் குருதியில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனாலேயே குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போதைப் பழக்கத்தினால் வயிற்றில் வளர்ந்த சிசுவை கொல்ல முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றில் அத்தாயின் மீத வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரதித்த நீதிமன்றம் குறித்த தாய்க்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

இதேவேளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: ,