உறவுகளை நினைவுகூர தடையில்லை; முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்து இராணுவப் பேச்சாளர்

Ruwan_Wanigasuriya
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் தாயகத்தில் இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு அச்சுறுத்தல்கள் ஏதும் விடுக்கப்படலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது,

“எந்தத் தடையும் இல்லை. அவர்கள் வழிபாடு செய்ய முடியும். அதற்கு இராணுவத்தினர் எந்த வகையிலும் தடையாக இருக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது” என்றார் அவர்.

-uthayan

Tags: , ,