சனல்4 காணொளியை ஏற்றுக் கொள்ள முடியாது; இலங்கை அறிவிப்பு

chennal4
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தி சனல் போ தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி ஏற்றுகொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் கொலைக்கலங்கள் யுத்தசூனிய வலயம் காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் காட்டப்படும் சில காட்சிகள் பொய்யானவை என்றும், அதில் பேசப்படும் தமிழ் வசனங்கள் முரணானவை.

இந்தநிலையில், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் செனல் போ நிறுவனம் காணொளியின் மூலப்பிரதிகளை வழங்குமாயின் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,