
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரியபல நினைவுப் பொருட்கள் இம்மாத இறுதியில் லண்டனில் ஏலத்துக்கு வருகின்றன.
காந்தி பயன்படுத்திய பொருட்களுடன் இன்னும் பல முக்கிய வரலாற்று ஆவணங்களும் ஏலத்து விடப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த முல்லொக்ஸ் ஏல விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது.
காந்தி அணிந்த ஒரு சோடி காலணி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ( இந்திய பணத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய்க்கு மேல்) ஏலத்துக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், 1932-இல் ‘ காந்தியை ஒரு பயங்கரவாதி’ என்று அறிவிக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆவணமொன்றும் இந்த ஏலத்தில் விற்கப்படவுள்ளது.





