வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர். வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது. வணிகன் கேட்டான்,”இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”
எமதூதர் சொன்னார், ”மூன்று வழிகளில் ஒன்று பூமியிலிருந்து நாம் வந்த பாதை.ஒன்று சொர்க்கத்திற்குப் போவது. மூன்றாவது நரகத்திற்குப் போகும் வழி.நீ பூமியில் இருந்தபோது சில நல்ல காரியங்களும்செய்திருக்கிறாய். சில கெட்ட காரியங்களும் செய்திருக்கிறாய். எனவே நீ கொஞ்ச காலம் சொர்க்கத்திலும், கொஞ்ச காலம் நரகத்திலும் இருக்க வேண்டும்.முதலில் எங்கு செல்வது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும்.”என்றார்.
வணிகன் உடனே சொன்னான்,”என்னிடம் கேட்டால், நான் இந்த இடத்திலேயே இருந்து விடுகிறேன். எவ்வளவு அருமையான முச்சாலை சந்திப்பு!
இங்கு மட்டும் ஒரு கடை வைத்து விட்டால் வியாபாரம் எப்படி இருக்கும்! எனக்கு சொர்க்கமும் வேண்டாம். நரகமும் வேண்டாம்.”