அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிணத்தை கொண்டுவாருங்கள் என்னும் அர்த்தத்தில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை ஒரு புதிய ஆங்கில இணையதள பத்திரிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு அறிவிப்பு ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆங்கில இணையதள பத்திரிக்கையால் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில், ஒபமாவின் படம் அச்சிடப்பட்டு அதில் ‘மக்களை கொன்ற கொலைகாரன் பராக் ஒபாமா. பிணமாக மட்டும் தேவை.’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
‘ஆசான் – எ கால் டு ஜிகாத்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 80 பக்க பத்திரிக்கையில், ‘தலிபான் இன் குஹ்ரசன்’ என்ற வார்த்தையும் அனைத்து பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள குஹ்ரசன் என்ற வார்த்தை ஆப்கனிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுபவை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்த பத்திரிக்கையை நடத்துகிறார்கள் என்று கருதப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி, இந்த விளம்பரம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு விரைவில் ஒரு முற்றுப