கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்யும்படி கருணாநிதி வழக்கு

ntamil-karunanidhi
இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், கச்சத்தீவு தொடர்பான 1974, 1976 ஆம் ஆண்டுகள் ஒப்பந்தங்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானவை. இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: , ,