மகிழினி மணிமாறன் – தெரியுமா? கும்கி படத்தில் வரும் ‘கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் (சொய் சொய்ங்)’ என்று மனதை கொள்ளை கொள்ளும் பாடல் இவர் பாடியது தான்.
அவரின் மண்வாசனை கலந்த குரலில் அந்தப் பாடலை கேட்கும் போதே மனம் சொக்கித்தான் போகிறது. இவருக்கு விகடன் விருதுகள் 2012 ‘சிறந்த பாடகி’க்கான விருது கொடுத்து கௌரவித்துள்ளது. மேலும் பல படங்களில் இவர் பாடுவார் என்று நம்புவோமாக. பாராட்டுகள் மகிழினி.
வடக்கிலிருந்து, வெளிநாட்டில் இருந்து வரும் (தமிழின் இனிமையை, மென்மையை திருகும்) பாடகர்களை எல்லாம் கொண்டாடுகிறோம் தமிழரான இவரையும் கொஞ்சம் கொண்டாடினால் என்ன?