கபில்தேவின் பதில்

Kapil-Dev
1983ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றபோது இந்திய அணியின் தலைவராயிருந்த கபில் தேவ்வை கோப்பையை வழங்கும் மேடைக்கு அழைத்தார்கள்.

இந்திய அணியினரின் வெற்றி குறித்து அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டார் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர்.

கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டமையால் கபில்தேவால் சரியாக பதில் சொல்லவியலவில்லை. திக்கித்தடுமாறி பேசினார்.

அடுத்தநாள், இவருடைய குறைவான ஆங்கிலமொழிப்புலமையை அங்குள்ள நாளேடுகள் கிண்டலடித்து எழுதியிருந்தன.

இந்த செய்தி கபிலின் காதுகளுக்குப்போனது.

சிலநாட்களுக்குப்பின்னர்.. வெற்றிக்கோப்பையுடன் தாயகத்திற்குத் திரும்ப விமானநிலையம் வந்த அவரை தங்களது காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மீண்டும் பிடித்துக்கொண்டு, உங்களது ஆங்கிலம் ஏன் படுமோசமாயுள்ளதென்று கேட்டார்கள்.

அதற்கு கபில்தேவின் பதில்:

பாருங்கள்.. நாங்கள் இங்கே ஆங்கிலம் பேசுவதற்காக வரவில்லை. கிரிக்கெட் விளையாட வந்தோம். இதோ கோப்பையுடன் செல்கிறோம். ஆங்கிலம் தெரியாததற்காக நான் வெட்கப்படவில்லை.

உங்களது நாட்டின் தேசிய விளையாட்டான கிரிக்கெட்டின் உலகக்கோப்பையை நாங்கள் எடுத்துச்செல்கிறோம். இதற்காக நீங்கள்தான் வெட்கப்படவேண்டும்.

எப்புடி…? இதுல என்ன கொடுமைனா, இங்கிலாந்து இதுவரைக்கும் ஒருமுறைகூட “ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை” வெல்லவில்லை.

Tags: ,