மாத்தளை மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மாத்தளை மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விசாரணைகளின் போது ஜே.வி.பி. உறுப்பினர்கள் நேரடியாக நீதிமன்றில் பிரசன்னமாகத் திட்டமிட்டுள்ளனர். மாத்தளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.