மனித உரிமை காரணிகளினால் பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்கவில்லை – ரவி கருணாநாயக்க

ravi-karunayake
மனித உரிமை காரணிகளினால் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான மனித உரிமை நிலைமைகளே பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்கத் தீர்மானித்தமைக்கான ஏதுவாக இருக்கக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் இல்லாமல் இருந்திருந்தால் பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்றிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்துமாறு இலங்கைக்கு பிரித்தானிய மஹாராணி வலுவான ஓர் செய்தியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,