தமிழக முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
அமெரிக்காவின் குடிப்பெயர்வு, சனத்தொகை மற்றும் அகதிகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தம் காரணமாக தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழகத்தில் தஞ்சம் கோரி சென்றவர்கள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்கிலேயே அமெரிக்க அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அங்குள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முகாம்களில் பால்நிலை பேதங்களை தவிர்த்தல், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்தல், சிறுவர்களின் கல்வி நிலை மற்றும் சிறந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.