மனைவியை காப்பாற்ற நாயை கடித்த கணவர்

wife23
அமெரிக்காவில் மனைவியை தாக்கிய நாயிடமிருந்து அவரை காப்பாற்ற, அந்த பெண்ணின் கணவர் நாயை கடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்தவர் காரன் ஹென்றி, இவர் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது, உடன் அவரது நாயையும் அழைத்து செல்வது வழக்கம்.

எப்போதும் போல நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காரனை மற்றொரு நாய் திடீரென தாக்க துவங்கியது. சுமார் 30 கிலோ வரை எடை உடைய ஒரு லாப்ரடார் வகை நாய் ஒன்று காரனை தாக்கியதில், அவரது மூக்கு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. காரனை கீழே தள்ளிய அந்த நாய் அவரது கால்கள் மற்றும் கழுத்து பகுதியை கடிக்க முற்படும்போது அங்கு யாருமே எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

காரனை நாயிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்காக, காரனின் கணவர் லயின், அந்த நாயின் மூக்கை கடித்து, அதனை விரட்டினார். இதில் லயினிக்கும் காயம் ஏற்பட்டது.

நாயிடமிருந்து தப்பிய இந்த தம்பதி உடனடியாக மெர்சி மெடிகல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாயால் கடுமையாக தாக்கப்பட்டதில் மூக்கு பகுதி முற்றிலும் சிதைந்துபோன காரனுக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: ,