பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்பதாலேயே அந்த நாடு வழங்கிய நிதியுதவியை இலங்கை நிராகரித்ததாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது போனதால், நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா கூறியிருந்தது.
இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நிதியுதவியுடன் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதாலேயே அது நிராகரிக்கப் பட்டதாகக் கூறியுள்ளார்.
நன்கொடைக்கான நிபந்தனைகள் ஒரு இறைமையுள்ள நாடு என்ற எமது நிலைக்கு ஏற்றதாக இருக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நிபந்தனைகள் குறித்து வினவிய போது, இதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த நன் கொடை நிதியைப் பயன்படுத்தும் குழுவின் தலைவராக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இருப்பதே, இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்ப தால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஆனால், மொஹான் பீரிஸே தலைவராக இருக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஓர் இறைமையுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்காவின் இந்த எதிர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.