இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை நீடிக்கின்றது – சீ.பி.ஜே

CPJ
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நிலை காணப்படும் நாடுகளின் தர வரிசையொன்றை அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஈராக், இலங்கை, மெக்ஸிக்கோ, கொலம்பியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
எவ்வாறெனினும், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2012ம் ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்பில் எவ்வித மாற்றங்களும் கிடையாத என தெரிவித்துள்ளது.
கடந்த தசாப்த காலத்தில் ஒன்பது ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் கிரமமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

_GTN

Tags: