சிறிலங்கா மீது அமெரிக்கா நேரடியாக அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அறிக்கைக்கு அப்பால், சிறிலங்கா அரசு மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்,
“சிறிலங்காவுடன் இணைந்து இருதரப்பு ரீதியில் தொடர்ந்து பணியாற்றவுள்ளோம்.
சிறிலங்கா தொடர்பாக அத்துடன் அனைத்துலக மட்டத்தில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ள, விருப்பம் கொண்டுள்ள தரப்புகளுடன் தொடர்ந்து நாம் வெளிப்படையான முறையில் பணியாற்றுகிறோம்.
அவை தவிர எமது கவலைகளை நாம் நேரடியாக தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
-uthayan