இளம் பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை

joung-family
மனித வாழ்வில் பருவ நிலைகளை குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப்பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக்கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும்.

வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது.

இது வரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினைகைக் கொள்ள வேண்டும்.

குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்குகின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள்.

தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர்பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது.

இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டுவதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமானமன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எதிர்பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும்.

கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக்கூடாது. வளர்இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக் கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு.

இவர்களுக்கிடையே ஏற்படக் கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும்போது அது பெருமளவில் பெண்களைத் தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்து விடவோ கூடும். எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.

Tags: ,