ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல;அவசியம்: சீமான்

tamil-news-seeman
ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று எம்மை குற்றம் சாட்டுகிறார்கள். இன்று எல்லா அரசியல்வாதிகளும் ஈழத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். ஆனால் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அதுஅவசியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான்.
நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் பரதேசி பட இயக்குநர் பாலா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு பாராட்டு விழா வடவள்ளி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அழிந்த கலைகளை காப்பதற்காகவும், நலிந்த கலைஞர்களை காப்பாற்றுவதற்காகவும் நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை தொடங்கப்பட்டுள்ளது.

தம்பி பாலா மக்களால் பாராட்டப்பட்ட கலைஞன். முதன் முதலாக மக்கள் கைகளால் விருது வாங்கியவர். மிகச் சிறந்த திறமைசாலி. உலகின் தலைசிறந்த இயக்குனராக உச்சத்துக்கு செல்வார்.

சென்னையில் சினிமா வாய்ப்புக்காக நானும் தம்பி பாலாவும் பல சிரமங்களை அனுபவித்தோம். பசியால் துவண்டு போனாலும் முயற்சியைக் கைவிட மாட்டோம்.

ஒளிப்பதிவாளர் செழியனும் பல சிரமங்களை அனுபவித்து இன்று இந்த நிலையை அடைந்துள்ளார். அவரும் ஒளிப்பதிவில் உச்சம் தொடுவார்.

இவர்கள் களத்துக்கு நேரடியாக வராவிட்டாலும் என்னை அனுப்பி வைத்ததே இவர்கள்தான். இவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து பாராட்ட உள்ளோம்.

ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். இன்று எல்லா அரசியல் வாதிகளும். ஈழத்தைபற்றித் தான் பேசுகின்றனர்.ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அவசியம் என்று தெரிவித்தார்.

Tags: , ,