பதிலடி..!

vaariyaar
ஒருசமயம் திருமுருக கிருபானந்தவாரியார் ரயிலில் உள்ள கம்பார்ட்மெண்டிலுள்ள குளியலறையில் குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறைப் பூசிக் கொண்டு வந்து, தனது இருக்கையில் உட்கார்ந்தார்.

அவருக்கு எதிரே உட்கார்ந்து பயணம் செய்துகொண்டிருந்த மனிதர், அவரைப் பார்த்து, “ஐயா, இதென்ன? நன்றாக இருந்த நெற்றியில் சுவரில் வெள்ளையடிப்பது போல அடித்துக் கொண்டிருக்கிறீர்களே?” என்று கிண்டலாகக் கேட்டார்.

வாரியார் அவர் மீது கோபம் கொள்ளவில்லை.மாறாகப் புன்னகைத்தபடி, “தம்பி, மனிதர்கள் குடியிருக்கும் வீட்டுக்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

பாழடைந்த வீட்டுக்கு யாரும் வெள்ளையடிக்க மாட்டார்கள். என் நெற்றியிலே பகுத்தறிவு குடிகொண்டிருக்கிறது. அதனால்தான் வெள்ளையடித்துக் கொண்டேன்!” என்றார்.கேள்வி கேட்டுக் கிண்டல் செய்த மனிதர், தனது வெறும் நெற்றியை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டு தலைகுனிந்தார்.

Tags: ,