காட்சி ஆரம்பித்தது
கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள்
வில்லன் அதை
விஷமத்தனமாகப்
பார்த்துக்கொண்டிருந்தான்
‘உன் அக்கா தங்கச்சிய
இப்படிப் பாப்பியடா…’
வசனம் பேசி
சண்டையிட்டான் கதை நாயகன்
நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டு
குளிக்க ஆரம்பித்தாள் நாயகி
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்!
- ஆ.கீதம் லெனின்