ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

Powerstar-Srinivasanசென்னை: ரூ.50 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது நண்பர் ஒருவர் மூலம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகமானார்.

அப்போது, தனக்கு பல தொழில்கள் இருப்பதாகவும், இந்த தொழில்களை விரிவுபடுத்த தனக்கு 5 கோடி ரூபாய் கடன் வாங்கித் தரும் படி கேட்டுள்ளார் ரங்கநாதன்.

தனக்கு பல வங்கிகளில் தொடர்பு இருப்பதால் பணம் வாங்கித் தருவதாகவும், 50 லட்ச ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் என்றும் பவர் ஸ்டார் அப்போது கூறியுள்ளார்.

இதை நம்பிய ரங்கநாதன், ரூ.50 லட்சத்தை பவர் ஸ்டாரிடம் கமிஷனாக கொடுத்துள்ளார். ஆனால், கூறிய படி பவர் ஸ்டார் பணம் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் கமிஷனாக கொடுத்த 50 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார் ரங்கநாதன்.

ஆனால், வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார் பவர் ஸ்டார். மீண்டும் பணத்தை கேட்டதால், ரங்கநாதனை, பவர் ஸ்டார் மிரட்டியுள்ளார்.

“உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என்னுடன் நடிகர் சங்கம் இருக்கிறது, உன்னை தொலைத்து விடுவேன்” என்று ரங்கநாதனை மிரட்டியுள்ளார் பவர் ஸ்டார்.

இதையடுத்து, நடிகர் சீனிவாசன் மீது மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் ரங்கநாதன் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் இன்று நடிகர் சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.

-Vikatan

Tags: , , ,