கண்டுபிடிப்புகள் எங்கள் ரத்தத்தில் கலந்தது – ஒபாமா பெருமிதம்

Tamil-Daily-News_obama
அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவியல் ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறன் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக பெருமை பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்கா உலகின் பொருளாதார பலம் வாய்ந்த நாடாக திகழ்வதற்கு நாட்டு மக்களின் திறமை தான் காரணம். பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. இந்த திறன் நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. நமது அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உலக மக்களுக்கு நாம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளோம் என பாராட்டியுள்ளார்.

Tags: ,