
”விளையாட்டு வினையாகும் என்பார்களே… அதற்கு உதாரணம்?”
”கொஞ்சநஞ்ச வினையல்ல… பெரிய வினை!
நெதர்லாந்து நாட்டின் ஹரென் நகரில் வசிக்கும் மேர்த்தே வுஸ்தியுஸ் (Merthe Weusthuis)என்ற சிறுமி தனது 16-வது பிறந்த நாள் கொண் டாட்டத்தில் கலந்துகொள்ள, ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு அழைப்புவிடுத்தாள். ‘தன் நண்பர்களுக்கு மட்டும்’ என்று அவள் குறிப்பிடாததால், அந்த அழைப்பு ஃபேஸ்புக்கில் வைர ஸாகப் பரவி 2,40,000 பேரைச் சென்றடைந்து இருக்கிறது.
30 ஆயிரம் பேர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதா கச் சொல்லியிருந்தனர்.
வெறும் 18 ஆயிரம் பேரே வசிக்கும் ‘ஹரென்’ நகரத்துக்கு பல்லாயிரம் பேர் திரண்டுவந்துவிட்டால் என்ன செய்வது? பயந்துபோன மேர்த்தேவின் தந்தை போலீஸில் புகார் செய்தார்.
உள்ளூர் போலீஸ் எண்ணிக்கை குறைவாக இருந்த தால், அருகில் உள்ள ஊர்களில் இருந்தெல்லாம் போலீஸ் வர வழைக்கப்பட்டனர்.மதுவிடுதிகள் மூடப்பட்டன. உலக மீடியாக்கள் குவிந்துநின்றன.
அந்த நாளும் வந்தது. விடியத் தொடங்கும்போதே ஹரென் நகரத்தை நோக்கிப் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் குவியத் துவங்கியது. ஒரே சத்தம், வெறிக் கூச்சல்… போதையில் இருந்தவர்கள் கண்ணில்பட் டதை எல்லாம் அடித்துத் துவம் சம் செய்தார்கள். போலீஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நாள் முடிந்தபோது ஹரென் நகரம் நாசமாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து, ஹரென் நகரைச் சுத்தப்படுத்த வும் ஃபேஸ்புக்கில் ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது. 33 ஆயிரம் லைக்குகள் வந்தன. ஆனால், நகரத்தைச் சுத்தப்படுத்த வந்தவர்கள் சொற்ப அளவினரே!”
- இசையன்பன், ஈரோடு.
(நானே கேள்வி நானே பதில் – விகடன் 06.02.2013)





