நடிகை ரேவதிக்கு விவாகரத்து

revathi
திரைப்பட நடிகை ரேவதிக்கும் இயக்குநர் சுரேஷ் மேனனுக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நடிகை ரேவதிக்கும், இயக்குநர் சுரேஷ் மேனனுக்கும் கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுரேஷ் மேனன தயாரித்த புதியமுகம் என்ற திரைப்படத்தில் ரேவதி நடித்தார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கில் விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இருவருக்கும் திங்கள்கிழமை விவாகரத்து வழங்கி நீதிபதி ராஜாசொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

Tags: , ,